Thursday, January 20, 2022

தென் ஜியோர்ஜியா தீவில் அருங்காட்சியகம்

 அருங்காட்சியகம் அதாவது மியூசியம் என்றால் ஏதோ பள்ளி மாணவர்கள் வந்து பார்த்து அதிசயித்து செல்லும் இடம் எனத்தான் நமது சூழலில் பலரும் நினைக்கின்றார்கள். நான் தொடர்ச்சியாக அருங்காட்சியகங்கள் பற்றி தகவல் வழங்கிக் கொண்டிருப்பதை நண்பர்கள் பலர் அறிவீர்கள். அந்த வகையில் ஒரு சுவாரசியமான செய்தி.



தென் அமெரிக்காவிற்குக் கீழே (படத்தில் காண்க) உள்ள தீவுதான் தென் ஜியோர்ஜியா. இத்தீவில் விமானநிலையம் கூட இல்லை. 4 நாள் படகுப்பயணத்திற்குப் பின் தான் அடுத்த நிலப்பகுதி விமான நிலையத்தையே அடைய முடியும்.
அங்கு நிரந்தர குடுயிறுப்புகளும் இல்லை. ஆய்வாளர்களும் பணியாளர்களும் மட்டும்தான் இருக்கின்றனர். கொரோனா தொற்றுக்கு முன்னர் இத்தீவுக்குச் சராசரியாக 100 படகுகள் வருமாம் அதில் ஏறக்குறைய ஆண்டுக்கு 10,000 வருகையாளர்கள் வரும் வகையில் இந்த அருங்காட்சியகம் செயல்பட்டுள்ளது. இப்போது மிண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நுழைவுக்கட்டணம் இல்லை. இவ்வளவு தூரம் செல்வதற்கே நமக்கு யாரும் காசு கொடுப்பார்களா என சிலர் யோசிப்பது புரிகிறது 🙂
நேரில் செல்ல முடியாவிட்டால் என்ன? இப்போதுதான் இண்டெர்நெட் நமக்கு உலகை நம் கண்முன்னே கொண்டு வந்து விட்டதே. இந்த லிங்கில் அழுத்தி சென்று பாருங்கள்.
இதன் சேகரிப்புக்களைக் காண https://sgmuseum.gs/ சென்று காணலாம்.
இயற்கை வரலாறு தொடர்பான ஆய்வுப்பணிகளைக் காட்சிப்படுத்தும் கூடமாக இது இருக்கின்றது.
நமது நாட்டில் நாம் வாழும் நகரில் நமக்குப் பக்கத்தில் இருக்கும் அருங்காட்சியத்திற்கு நாம் சென்றிருக்கின்றோமா என யோசிக்கலாம்.
சரி, அண்மையில் நீங்கள் சென்று வந்த அருங்காட்சியகம் பற்றி ஓரிரு வரிகள் சொல்லுங்கள் நண்பர்களே.